நாடார் மகாஜன சங்கம் சார்பில் பேச்சு போட்டி
நாடார் மகாஜன சங்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.
கரூரில் உள்ள மார்னிக் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியில் நேற்று பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதற்கு மாநகர தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சு போட்டியானது 6,7,8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டன. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-ம் பரிசாக 3 ஆயிரமும் வழங்கப்பட்டன.
இதில் மார்னிக் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி தாளாளர் அருண் என்.கருப்புசாமி, சின்னதாராபுரம் நிமலா செல்லத்துரை பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் செயலாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 14-ந்தேதி விருதுநகரில் நடைபெற உள்ள மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். முடிவில் மாநகர செயலாளர் ராசி சதீஸ் நன்றி கூறினார்.