சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில்பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில்பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
x

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.

சேலம்

சேலம்

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. தமிழ் என் மூச்சு, நேற்று இன்று நாளை- இளைய சமுதாயம் என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி இணைப்பேராசிரியர் நடராஜன் வரவேற்றார். தமிழ் இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசை நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஸ்மியும், 2-ம் பரிசை தர்மபுரி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி பேனிஷ்ப்ரியாவும், 3-ம் பரிசை சேலம் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சக்தியும் பெற்றனர். மேலும், 8 மாணவ- மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வர்கள் கீதா, பேகம் பாத்திமா, கல்லூரி உதவி பேராசிரியை மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story