பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் இந்திய சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் கல்லூரி பவள விழாவை முன்னிட்டு காரைக்குடி வட்டார பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் 9-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 35 மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வேலாயுதராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன் பரிசுகள் வழங்கினார். முடிவில் யூத் ரெட் கிராஸ் மாணவ பிரதிநிதி ஜீவக பிரியா நன்றி கூறினார்.