சொற்பொழிவு நிகழ்ச்சி


சொற்பொழிவு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் வள்ளல் அழகப்பரின் 114-வது பிறந்தநாளையொட்டி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் வள்ளல் அழகப்பரின் 114-வது பிறந்தநாள் விழா பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வள்ளல் அழகப்பர் நினைவு மரியாதை பேரணி பவநகர் விளையாட்டு அரங்கில் தொடங்கி அழகப்பர் நினைவாலயத்தில் முடிந்தது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமையில் பல்கலைக்கழக அதிகாரிகள், ஆட்சி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வள்ளல் அழகப்பருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வள்ளல் அழகப்பர் பிறந்தநாள் விழா சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காரைக்குடி கம்பன் கழக தலைவர் கம்பன் அடிசூடி பழ பழனியப்பன் நிறுவுனர் நாள் உரை நிகழ்த்தினார். இதில், பேராசிரியர் திருமூர்த்தி, உதவிப்பதிவாளர் அலமேலு, மேலாண்மையியல் மாணவர் அபுகாவிர், கல்வியியல் மாணவி ஸ்ரீதேவி ஆகியோர் வள்ளல் அழகப்பர் குறித்து பேசினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story