கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க 10 இடங்களில் வேகத்தடைகள்


கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க 10 இடங்களில் வேகத்தடைகள்
x

கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க 10 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க 10 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 2 பேர் சாவு

கோவை-திருச்சி ரோட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்தனர். இதனை தொடர்ந்து திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தடுப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கும் பணிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

10 இடங்களில் வேகத்தடை

கோவை-திருச்சி மேம்பாலம் முழுவதும் முக்கியமாக 10 இடங்களில் சிறிய வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படும். மேலும் அபாய பகுதி குறித்து விளக்க படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேம்பால சாலையில் ஆயிரம் ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படுகின்றன. மேம்பால சாலை பிரியும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடையும். விபத்து தடுப்பு பணிகள் முடிந்து நாளை அல்லது நாளை மறுநாள் திருச்சி ரோடு மேம்பாலம் பொதுமக்கள பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story