விபத்துகளை தடுக்கவே, வேக வரம்பு கட்டுப்பாடுகள் - சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்


விபத்துகளை தடுக்கவே, வேக வரம்பு கட்டுப்பாடுகள் - சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்
x

பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என்று சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் கூறினார்.

சென்னை,

சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த வேக கட்டுப்பாட்டு விதிமுறை நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் வேக கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் ரூ.1.21 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடு குறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த வேக கட்டுப்பாடு தற்போது மாற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் புதிய வேக கட்டுப்பாடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஐஐடி ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து, கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்துகளை தடுக்கவே சென்னையில் வேக வரம்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முறையான ஆய்வுகளுக்கு பிறகே வேக வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story