பிள்ளையார்பட்டியில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீட்டிற்கு ஆன்மிக நடைபயணம்


பிள்ளையார்பட்டியில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீட்டிற்கு ஆன்மிக நடைபயணம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்பட்டியில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீட்டிற்கு ஆன்மிக நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்

வலையபட்டி சித்தர் பச்சைக்காவடி அய்யா தலைமையில் 24 பேர் கொண்ட குழுவினர் முருகப்பெருமானின் அறுபடை வீட்டிற்கு ஆன்மிக நடைபயணம் மேற்கொள்கின்றனர். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் இருந்து 6-ம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரையை மேகாலாய முன்னாள் கவர்னர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். பிள்ளையார்பட்டியில் இருந்து திருப்பத்தூர்- மேலூர் வழியாக நாளை (சனிக்கிழமை) பழமுதிர்சோலை, மதுரை பசுமலை வழியாக 13-ந் தேதி திருப்பரங்குன்றம், தூத்துக்குடி வழியாக 23-ந் தேதி திருச்செந்தூர், காரியாபட்டி- திண்டுக்கல் வழியாக அடுத்த மாதம் 10-ந் தேதி பழனி, கணக்கன்பட்டி- திருச்சி வழியாக 24-ந் தேதி சுவாமிமலையையும் தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில், கடலூர், பாண்டிச்சேரி வழியாக ஆகஸ்டு 12-ந் தேதி திருத்தணியையும் அடைந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். 67 நாட்கள் மேற்கொள்ளப்படும் நடைபயணத்தில் 1157 கி.மீ. பயணிக்க உள்ளனர். உலக மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும் நடைபயணம் அமையும் என இக்குழுவின் தலைவர் வலையபட்டி சித்தர் பச்சைக்காவடி கூறினார்.

1 More update

Next Story