தர்மபுரியில் சரக அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்: 550 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


தர்மபுரியில் சரக அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்: 550 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 7:00 PM GMT (Updated: 21 Aug 2023 10:00 AM GMT)

போட்டிகளில் 14 வயது முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தர்மபுரி

தர்மபுரி சரக அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் மாணவர்களுக்கான போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். கபடி, எறிபந்து மற்றும் கோகோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயது முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று 2-து நாளில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கும் கபடி, எறிபந்து மற்றும் கோ, கோ ஆகிய போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் 14 வயது முதல், 17 வயதுடைய 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ரேணுகாதேவி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2 நாட்களில் நடந்த போட்டிகளில் மொத்தம் 550 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சரக அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story