மாநில தகுதி போட்டிக்கு கோவை மாணவிகள் அதிக இடம்


மாநில தகுதி போட்டிக்கு கோவை மாணவிகள் அதிக இடம்
x
திருப்பூர்


திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான கூடைப்பந்து தேர்வு போட்டி நடந்தது. இதில் மாநில தகுதி போட்டிக்கு கோவையை சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் தேர்வாகினர்.

மண்டல அளவிலான போட்டி

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் மாநில கூடைப்பந்து தகுதி போட்டிக்கான வீராங்கனைகள் தேர்வு திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் ஆகிய 3 பிரிவுகளிலும் மொத்தம் 147 மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு மாணவிகளின் தனித்திறமைகளை ஆய்வு செய்து வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி முடிவில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இருந்து கோவை மாவட்டத்தை சேர்ந்த அட்சித பிரசன்னா, ஸ்வாதிகா, நவ்யா, சுனிதா, லத்திகாஸ்ரீ, ஈரோடை சேர்ந்த தனிஷ்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை அதிக இடம்

இதேபோல் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோவையை சேர்ந்த ஹேமமாலினி, யுவஸ்ரீ, லட்சுமிபிரியா, மிருதுலா, நேத்ரா, செபோரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோைவயை சேர்ந்த சுபிக்சா,தேசனா, சந்தியாஸ்ரீ, ேஹமலேகா, ஜென்சி, ஈரோடை சேர்ந்த சஜிஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

குறிப்பாக 3 பிரிவுகளிலும் மொத்தம் தேர்வான 18 வீராங்கனைகளில் 16 பேர் கோவையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மாநிலம் முழுவதும் உள்ள மண்டலங்களில் தேர்வாகும் மாணவிகள் தகுதி போட்டிக்கு பங்கேற்று அதிலிருந்து மாநில அணிக்கு வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

1 More update

Next Story