கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு; பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வழங்கினார்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் வழங்கினார்.
ஈரோடு
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் வழங்கினார்.
மாநில விளையாட்டு போட்டி
ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 7-வது ஆண்டாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. கல்லூரியின் தாளாளர் பழனிசாமி, முதல்வர் என்.ராமன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து ஆகிய போட்டிகள் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் ஈரோடு, நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, சென்னை, கரூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 140-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கால்பந்து
விழாவுக்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் எஸ்.டி.என்.ராஜேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
கால்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் நாமக்கல் அரசு விளையாட்டு விடுதி அணி முதலிடத்தையும், தஞ்சாவூர் ஏ.டி.டபிள்யூ. அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் 2-வது இடத்தையும், நெய்வேலி என்.எல்.சி. மேல்நிலை பள்ளிக்கூடம் 3-வது இடத்தையும், ஈரோடு வடுகப்பட்டி ராஜேந்திரா மேல்நிலை பள்ளிக்கூடம் 4-வது இடத்தையும் பிடித்தன.
கூடைப்பந்து
கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை டான் பாஸ்கோ அணி முதலிடத்தையும், சென்னை புனித பிட்ஸ் மேல்நிலை பள்ளிக்கூடம் 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் மேல்நிலை பள்ளிக்கூடம் 3-வது இடத்தையும், திருச்சி எஸ்.எம்.எச்.எஸ்.எஸ். வாரியர் அணி 4-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் சேலம் சென்மேரிஸ் மேல்நிலை பள்ளிக்கூடம் முதல் இடத்தையும், ஆத்தூர் பாரதியார் மேல்நிலை பள்ளிக்கூடம் 2-வது இடத்தையும், சென்னை அரசு விளையாட்டு விடுதி அணி 3-வது இடத்தையும், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் 4-வது இடத்தையும் பிடித்தன.
கூடைப்பந்து ஆண்கள் பிரிவில் மன்னார்குடி நேஷனல் மேல்நிலை பள்ளிக்கூடம் முதலிடத்தையும், தூத்துக்குடி கிரஸண்ட் மேல்நிலை பள்ளிக்கூடம் 2-வது இடத்தையும், சென்னை வேலம்மாள் மேல்நிலை பள்ளிக்கூடம் 3-வது இடத்தையும், தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மேல்நிலை பள்ளிக்கூடம் 4-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் அணி முதலிடத்தையும், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலை பள்ளிக்கூடம் 2-வது இடத்தையும், ஈரோடு வடுகப்பட்டி ராஜேந்திரா மேல்நிலை பள்ளிக்கூடம் 3-வது இடத்தையும், சேலம் சென்ஜோசப் அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
கபடி
கபடி போட்டி ஆண்கள் பிரிவில் திருச்சி எஸ்.எம்.மேல்நிலை பள்ளிக்கூடம் முதலிடத்தையும், சென்னை வேலம்மாள் மேற்கு அணி 2-வது இடத்தையும், தேனி அரசு விளையாட்டு விடுதி அணி 3-வது இடத்தையும், ஊஞ்சலூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் 4-வது இடத்தையும் பெற்றன.
இந்த விழாவில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.