தர்மபுரி மாவட்ட விளையாட்டு போட்டி: பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை


தர்மபுரி மாவட்ட விளையாட்டு போட்டி:  பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அதன்படி 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் நீச்சல் போட்டியில் மாணவர்கள் தருண் சிங், மோகன் பாலாஜி, தீபக்ராஜ், பூபதி மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் நீச்சல் பிரிவில் சச்சின், கார்த்திக், உதய தாவீத், அபிஷேக் மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் சஞ்சய் வருண் ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

இவர்கள் காஞ்சீபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். தடகள பிரிவில் மாணவர்கள் தருண் சிங், அப்ராட் அகமத், தர்மன், கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இரட்டையர்களுக்கான இறகுப்பந்து போட்டியில் அப்ராட் அகமத், அன்பரசு ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். கேரம் விளையாட்டில் யோபு, சஞ்சய் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் அரியலூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வீரன், மகேந்திரன், கண்ணன் ஆகியோரை பொறுப்பு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, மூத்த ஆசிரியர் முனியப்பன், உதவி தலைமை ஆசிரியர்கள் லட்சுமணன், லில்லி, ஆசிரியர்கள் கல்வி குழு தலைவர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story