மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு மாணவர் தேர்வு


மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு  மாணவர் தேர்வு
x

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு மாணவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர். பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவன் விக்னேஷ் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்றார். இந்த மாணவனுக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாணவன் விக்னேஷ் ஜனவரி மாதம் அரியலூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். அந்த மாணவனையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர் ராஜா, நிரோஷா பானு ஆகியோரை பரமக்குடி கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் வியாக்கத் அலி கான் மற்றும் கல்வி குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜகான், தலைமை ஆசிரியர் முனைவர் அஜ்மல் கான், உதவி தலைமை ஆசிரியர் புரோஸ் கான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


Next Story