ஈரோட்டில் நடந்த மினி மராத்தான் போட்டியில் 450 பேர் பங்கேற்பு


ஈரோட்டில் நடந்த மினி மராத்தான் போட்டியில் 450 பேர் பங்கேற்பு
x

ஈரோட்டில் நடந்த மினி மராத்தான் போட்டியில் 450 பேர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோட்டில் நடந்த மினி மராத்தான் போட்டியில் 450 பேர் பங்கேற்றனர்.

மினி மராத்தான்

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டு லிம்கா உலக சாதனை பதிவில் இடம் பெற திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோட்டில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா மினி மராத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோம சுந்தரம் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பரிசு

ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பெருந்துறை ரோடு, காலிங்கராயன் இல்லம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியாக வ.உ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் உடல் தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் 450 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.

இதைத்தொடர்ந்து ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.


Next Story