பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 35 பெண்கள் கல்லூரிகள், 51 ஆண்கள் கல்லூரிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 2-வது நாளான நேற்று 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம், நாமக்கல் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி முதல்வர் குமாரவேலு தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


Next Story