பாவை கல்வி நிறுவனங்களில் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்


பாவை கல்வி நிறுவனங்களில்  பாரதியார் தின குழு விளையாட்டு போட்டி  அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 38-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் நேற்று முதல் தொடங்கி 10-ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கையுந்து பந்து, கபடி, கைப்பந்து, கால்பந்து, ஏறிப்பந்து, இறகுப்பந்து, ஆக்கி, கோ-கோ உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி ராசிபுரம் அருகே பாச்சலில் உள்ள பாவை கல்வி நிறுவனத்தில் நேற்று கூடைப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகள் நடந்தன. எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு குழுப்போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், பாவை கல்லூரி மற்றும் தொட்டியம் கொங்கு நாடு கல்லூரியில் நடைபெறும் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்று பேசினார்.

இதில் பள்ளி கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை) பொன்.குமார், இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) அனிதா, பாவை கல்வி நிறுவனங்களின்‌ தலைவர் ஆடிட்டர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) சிவரஞ்சன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, கணேசன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story