நாமக்கல் மாவட்ட கோகோ போட்டியில்எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை


நாமக்கல் மாவட்ட கோகோ போட்டியில்எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:

நாமக்கல், கரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கோகோ விளையாட்டு போட்டிகள் நாமக்கல்லில் உள்ள பி.ஜி.பி. கல்லூரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் மோதின. இதில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில், உடற்கல்வி இயக்குனர் சிவா, உடற்கல்வி ஆசிரியர்கள் நடராஜன், செந்தில், கீதா மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story