ஈரோட்டில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்


ஈரோட்டில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
x

ஈரோட்டில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின.

ஈரோடு

ஈரோட்டில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின.

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சிறப்பக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. முதன் முதலாக கால்பந்து போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமோன் முன்னிலை வகித்தார். நந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நாளை இறுதி போட்டி

முதல் நாளான நேற்று ஈரோடு செங்குந்தர் ஆண்கள் பள்ளி-சித்தோடு அரசு உயர்நிலைப்பள்ளி அணிகள் மோதின. மொத்தம் 26 பள்ளிகளின் மாணவர் அணியும், 10 பள்ளிக்கூடங்களின் மாணவியர் அணிகளும் பங்கு பெற்று உள்ளன. பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் நவரசம் பள்ளிக்கூட அணி- ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.

இன்று (புதன்கிழமை) கல்லூரி கால்பந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன. இதில் பெண்கள் அணி 14-ம், ஆண்கள் அணி 8-ம் பங்கேற்று விளையாடுகின்றன.

நாளை (வியாழக்கிழமை) இறுதி போட்டிகள் நடக்கின்றன. போட்டிகளை ஈரோடு வ.உ.சி.பூங்கா அரசு மாணவியர் விடுதி கால்பந்து பயிற்சியாளர் பி.சத்யா தலைமையில் விளையாட்டு துறையினர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.


Next Story