விளையாட்டு போட்டி


விளையாட்டு போட்டி
x

கடையநல்லூர் அருகே விளையாட்டு போட்டி நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையில் மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, எவரெஸ்ட் கல்வி குழும சேர்மன் முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story