விளையாட்டு போட்டி


விளையாட்டு போட்டி
x

நூற்றாண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்நடைபெற்றன.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா சார்பாக சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஸ்ரீராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியில் நடைபெற்றது. சிவகாசி துணை இயக்குனர் கலுசிவலிங்கம் நூற்றாண்டு விழா கொடியினை ஏற்றினார். கல்லூரி நிர்வாக அலுவலர் கனகவேல் விளையாட்டு ஜோதி ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், வட்டு எறிதல், பெண்கள் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கதை, கவிதை, ஒயிலாட்டம், நாடகம், நடனம், போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் சீனிவாசன், மாவட்ட நல கல்வியாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சமுதாய நல செவிலியர் பொன்னுத்தாய், கிராம சுகாதார செவிலியர் அந்தோணியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story