அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி- 27-ந் தேதி நடக்கிறது
அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 27-ந் தேதி நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் கோப்பைக்காண அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 27-ந் தேதி சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஆண் மற்றும் பெண்களுக்காக கபடி, தடகளம், கையுந்து பந்து, சதுரங்கம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அரசு ஊழியர்கள் ஆதார் கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story