மாநில முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி:கிருஷ்ணகிரியில் இருந்து 68 மாணவ, மாணவிகள் சென்னை பயணம்கலெக்டர் வழியனுப்பி வைத்தார்


மாநில முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி:கிருஷ்ணகிரியில் இருந்து 68 மாணவ, மாணவிகள் சென்னை பயணம்கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 29 Jun 2023 7:30 PM GMT (Updated: 29 Jun 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள 68 மாணவ, மாணவிகளை சென்னைக்கு கலெக்டர் சரயு வழியனுப்பி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாவட்டத்தில் இருந்து பள்ளி பிரிவின் சார்பில் கபடி விளையாட்டிற்கு 12 மாணவர்கள், 12 மாணவிகள், கையுந்து பந்திற்கு 12 மாணவர்கள், 12 மாணவிகள், சிலம்பத்திற்கு 5 மாணவர்கள், 5 மாணவிகள், கல்லூரி பிரிவின் சார்பில் சிலம்ப விளையாட்டிற்கு 5 மாணவர்கள், 5 மாணவிகள் ஆகியோர் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வழியனுப்பி வைப்பு

மாவட்ட அளவில் தேர்வான 68 மாணவ, மாணவிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 25-ந் தேதி வரை சென்னையில் நடக்கும் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை சென்னைக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, அனைவரும் வெற்றி பெற்று திரும்ப வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கொடியசைத்து பஸ்சை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஸ்குமார் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story