குமரி மாவட்ட போலீசாருக்கான விளையாட்டு போட்டி


குமரி மாவட்ட போலீசாருக்கான விளையாட்டு போட்டி
x

குமரி மாவட்ட போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

போலீசாருக்கான விளையாட்டு

குமரி மாவட்ட போலீசாருக்கு இடையேயான இறுதிச் சுற்று விளையாட்டு போட்டிகள் நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.

மாலையில் அவர் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட், கைப்பந்து, கயிறு இழுத்தல், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அனைத்து வகையான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற நாகர்கோவில் ஆயுதப்படையினருக்கு ஒட்டுமொத்த கோப்பை வழங்கப்பட்டது.


Next Story