விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி


விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
x

மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி வட்ட அளவில் மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இப்போட்டியை மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் (பொது) மதனகோபால், நிர்வாக அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சதுரங்கம், கேரம் ஆகிய போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினர். தொடர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) கபடி, கால்பந்து, கைப்பந்து மற்றும் தடகள போட்டிகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், கடலூரில் நடைபெறும் கோட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


Next Story