தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி


தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி
x

காரைக்குடியில் தென்மண்டல அளவிலான தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் வரை நடக்கிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் தென்மண்டல அளவிலான தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் வரை நடக்கிறது.

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் தென் மண்டலம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் வரை நடக்கிறது. இந்த போட்டியில் சிவகங்கை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், மதுரை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நாள் போட்டியை சிவகங்கை தீயணைப்புத்துறை அலுவலரும், தென் மண்டல துணைத்தலைவர் சத்தியகீர்த்தி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட உதவி அலுவலர் ராஜீ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தீயைணப்பு மாவட்ட அலுவலர்கள் கல்யாணகுமார் (தேனி), தென்னரசு (கன்னியாகுமரி), குமார் (தூத்துக்குடி), விவேகானந்தன் (விருதுநகர்), கணேசன் (நெல்லை), கவிதா (தென்காசி), வினோத் (மதுரை) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஓட்டப்பந்தயம்

முதல் நாள் 1500 மீட்டர் ஓட்டபந்தயம், பொதுமக்களை தீ விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் விரைந்து வந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பதையும், உயரமான இடத்தில் தீ விபத்து ஏற்படும் போது எவ்வாறு தீயை அணைப்பது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் தென்மண்டலங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓடி சென்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இந்த போட்டிகள் இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story