முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அழகப்பா கல்லூரி மாணவர்கள் சாதனை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அழகப்பா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சிவகங்கை
காரைக்குடி
2022-23-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர். இதில் பெண்களுக்கான கால்பந்து போட்டியில் முதல் பரிசும், கிரிக்கெட், ஆக்கி, இறகு பந்து, மேஜைப்பந்து, நீச்சல் மற்றும் தடகளம் ஆகிய போட்டிகளில் 2-வது பரிசும், ஆண்களுக்கான கிரிக்கெட், ஆக்கி, மேஜைப்பந்து ஆகிய போட்டிகளில் 2-வது பரிசும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி மற்றும் உடற்கல்வித்துறை இயக்குனர் அசோக்குமார் ஆகிேயார் பாராட்டினர்.
Related Tags :
Next Story