அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி
x

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் செந்துறை தாலுகாவில் உள்ள 50 அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கபடி உள்ளிட்ட குழு போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை ெவளிப்படுத்தி, வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story