போலீஸ் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டி


போலீஸ் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டி
x

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயம்

கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி மாநகர் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகரில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், லக்கி கார்னர், பந்துகள் சேகரித்தல் கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போலீசாருக்கான 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் காவலர் நித்தியானந்தன் முதலிடம், இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங் 2-ம் இடம், காவலர் ராமன் 3-ம் இடம் பிடித்தனர்.

கயிறு இழுக்கும் போட்டி

போலீசார் குழந்தைகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் லக் ஷன் தேவ் முதலிடம், பிரஜின் 2-ம் இடம், சரண் விக்னேஷ் 3-ம் இடம் பிடித்தனர். இதேபோல் பந்துகள் சேகரித்தல் போட்டியில் பிரதிக் ஷா முதலிடம், நித்யாஸ்ரீ 2-ம் இடம், தன்யஸ்ரீ 3-ம் இடம் பிடித்தனர். பெண்களுக்கான லக்கி கார்னர் போட்டியில் சுகபிரியா, சாந்தி, செல்வி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்து அசத்தினர்.

தொடர்ந்து பெண் போலீசாருக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தலைமை காவலர்கள் பிரவீனா, அமுதவள்ளி, முதல்நிலை காவலர்கள் கலைசெல்வி, சுகந்தி, தனுரேகா, ரேவதி, ஜெபஷீலா, செல்வி, மதிசெல்வி ஆகியோர் அடங்கிய அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

2-ம் இடத்தை தலைமை காவலர் மகாலட்சுமி முதல் நிலை காவலர்கள் விஜயலட்சுமி, சுமித்ரா, சத்யா, ஜானகி, காவலர்கள் வெங்கடேஸ்வரி, தீபா, செல்வணி, சகுந்தலா தேவி உமா தேவி ஆகியோர் அடங்கிய அணி பிடித்தது. இந்த போட்டியில் மாநகர் ஆயுதபடை போலீஸ் துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story