மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
x

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி விளையாட்டி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள், பெண்களுக்கென்று தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, நகர்மன்ற தலைவர் சுப்பராயலு, ஒன்றியக்குழுதலைவர் அலமேலுஆறுமுகம், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நகரமன்ற துணை தலைவர் ஷமீம் பானு அப்துல்ரசாக், நகர மன்ற உறுப்பினர்கள் தேவராஜ், செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story