முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
x

நாகையில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் 3,000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்


நாகையில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் 3,000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டி

நாகை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்தது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது பிரிவினர் என பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டி நடத்தப்படும் என்றும், மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் சிலம்பம், கபடி, கிரிக்கெட், இறகுப்பந்து, கால்பந்து உள்ளிட்ட 15 வகை விளையாட்டுகள் நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

3,000 பேர் பங்கேற்பு

அதன்படி நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கின. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 3,000 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story