ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு அளவில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலையில் நடக்கிறது.
தமிழ்நாடு காவல் துறையில் ஓரு அங்கமாக ஊர்க்காவல் படை இயங்கி வருகிறது. வருகிற மே மாதம் 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை தமிழ்நாடு அளவில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை தலைமை இயக்குனர் பி.கே.ரவி தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், ஊர்க்காவல் படையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.