போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள்:ஆயுதப்படை அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்:மாவட்ட சூப்பிரண்டு பரிசு வழங்கினார்


போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள்:ஆயுதப்படை அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்:மாவட்ட சூப்பிரண்டு பரிசு வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கான விளையாட்டு போட்டியில் ஆயுதப்படை அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டதை பெற்றன. அந்த அணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.

தேனி

பொங்கல் பண்டிகையையொட்டி தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசாருக்கு கிரிக்கெட், கைப்பந்து, எறிபந்து, இறகுபந்து, கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஆயுதப்படை அணிகள், உட்கோட்டங்களுக்கான அணிகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அணிகள் பங்கேற்றன.

கைப்பந்து போட்டியில் தேனி ஆயுதப்படை அணி முதலிடமும், பெரியகுளம் உட்கோட்ட அணி 2-வது இடமும் பிடித்தது. கிரிக்கெட் போட்டியில் ஆயுதப்படை அணி முதலிடமும், உத்தமபாளையம் உட்கோட்ட அணி 2-வது இடமும் பிடித்தது. இறகுபந்து போட்டியில் பெரியகுளம் உட்கோட்ட அணி முதலிடமும், தேனி உட்கோட்ட அணி 2-வது இடமும் பிடித்தது. கயிறு இழுத்தலில் உத்தமபாளையம் உட்கோட்ட அணி முதலிடமும், பெரியகுளம் உட்கோட்ட அணி 2-வது இடமும் பிடித்தது. எறிபந்து போட்டியில் பெரியகுளம் உட்கோட்ட அணி முதலிடமும், ஆயுதப்படை அணி 2-வது இடமும் பிடித்தது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆயுதப்படை பிரிவு அணிகள் பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. பரிசுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கி பாராட்டினார். விழாவில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story