விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x

குடவாசல் எம்.ஜி.ஆர். அரசு கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5-ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மாரிமுத்து தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் ரமேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். வணிகவியல் துறை பேராசிரியர் தேஷ் வரவேற்று பேசினார். வக்கீல் சிவசங்கரன் வாழ்த்தி பேசினார். தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கா.எழிலன் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிதான் நாடு முன்னேற்றம் அடைய வழிவகுக்கும். முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரி கல்விக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி கல்வித்துறை வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறார்.ஒரு காலத்தில் பெண்கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று பெண்கள் கல்வியில் முன்னேறி தனது சொந்த காலில் நிற்கும் வகையில் உள்ளனர் என கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் புவனேந்திரன் நன்றி கூறினார்.


Next Story