விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x

விருதுநகர் நோபிள் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் நோபிள் பள்ளியில் 21-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். மேலும் பள்ளியின் துணைத்தலைவர் நிஜிஸ், அவரது துணைவியார் டாக்டர் கீர்த்தி ரவீனா திரேஷ் கலந்து கொண்டனர். விழாவில் தலைமை விருந்தினராக அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்காரட், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு ஒலிம்பிக்கொடியையும், ஒலிம்பிக் தீபத்தையும் ஏற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் என்.எஸ். எஸ்., என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர். பள்ளி நிர்வாக குழு அலுவலர் உதயகுமார் வரவேற்றார். விளையாட்டு போட்டியில் ரூபி அணியினர் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி கோப்பையை பெற்றனர். முடிவில் கல்லூரி மாணவி பேரவை தலைவி சக்தி ஹரண்யா நன்றி கூறினார்.


Next Story