அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா


அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
x

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தொடங்கிவைத்து பேசினார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மாலையில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் டி.கே. கோபிநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக என்.சி.சி. 10-வது பட்டாலியன் நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.சுந்தரம் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். விழாவில் கல்லூரி நிர்வாக அலுவலர் எஸ்.சாண்டில்யன், இயக்குனர்கள் எஸ்.பிரசாந்த், டி.கிஷோர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் டி.சரவணன் நன்றி கூறினார்.


Next Story