அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா


அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
x

அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வேலூர் அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ், செயலாளரும், பொருளாளருமான ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவ-மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு மற்றும் அம்பு எறிதல், கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.ராமகிருஷ்ணன் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பின்னர் அவர், விளையாட்டின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இதில், கல்லூரி கல்வி இயக்குனர், முதல்வர், துணை முதல்வர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், இயக்குனர்கள் ஆர்.பிரசாந்த், டி.கிஷோர், உடற்கல்வி இயக்குனர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story