கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா
கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா நடந்தது.
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 36-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர். சந்திரா முருகப்பன் தலைமை தாங்கினார். திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் நகர் மன்ற உறுப்பினரும், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவருமான கலியபெருமாள், திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் பரிசுகளை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற மாணவர் எஸ். ஜீவானந்தம், மகாராஷ்டிராவில் நடந்த கலைப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கிஷோர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தாயுமானவன் செய்திருந்தார்.