மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 10-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நேஹா அஸ்வின்சிங் வரவேற்று பேசினார். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தாசில்தார் குமார் ஆகியோர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் மற்றும் பள்ளியின் நிர்வாகக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்வழங்கப்பட்டது. முடிவில்உடற்கல்விஆசிரியர் வினோத் நன்றிகூறினார்.