சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
திருவண்ணாமலை சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
கலசபாக்கம்
திருவண்ணாமலை சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
அருணாசலேஸ்வரர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் கணேசன், செயலாளர் வி.எம்.நேரு, பொருளாளர் மணி, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் இயக்குனர் அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரி முதல்வர் சீனிவாசன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் விலங்கியல் துறைத்தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.