செயின்ட் மேரிஸ் பள்ளியில் விளையாட்டு விழா


செயின்ட் மேரிஸ் பள்ளியில் விளையாட்டு விழா
x
சென்னை

ராயபுரம்,

சென்னை ராயபுரம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விளையாட்டு விழா, அண்ணா விளையாட்டு திடலில் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா, சென்னை சாக்கு வியாபாரிகள் சங்க தலைவர் கே.இளைய பெருமாள், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஜே.கே.நாதன், வக்கீல்கள் எஸ்.ராஜபாரதி, கார்த்திக், ஜி.எட்வர்ட்ராஜா, ஏ.முருகேஷ். எம்.ஜே.ஏசு ராஜா, டேனியல், சண்முகம், லாரன்ஸ் மற்றும் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு கொடி மற்றும் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். 2 ஆயிரம் மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்ட விழாவில் மாணவர் தலைவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் மாணவ அணி வகுப்பை நடத்தி வைத்தனர்.

அப்போது சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் 30 அடி உயரத்தில் சந்திரயானை சுமந்து சென்ற ராக்கெட் மாதிரியை அமைத்து இருந்தனர். மேலும் தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேலு உள்பட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இசையோடு கூடிய விளையாட்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் விளையாட்டு போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகி வக்கீல் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி, பள்ளி முதல்வர் ஆர்.ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story