புதிய விளையாட்டு மையம்


புதிய விளையாட்டு மையம்
x
திருப்பூர்


திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி பள்ளியில் விளையாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது.ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணன் மற்றும் ஷேர்ப்ளே நிர்வாக இயக்குனர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மற்றும் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன் பங்கேற்று விளையாட்டு மையத்தை திறந்து வைத்தனர்.

இந்த விளையாட்டு மையத்தில் கால்பந்து ஆட்டம், கபடி, கைப்பந்து, கையுந்து பந்து, கூடை பந்து, கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஆக்கி உள்ளிட்ட விளையாட்டுகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் கவிதாஅருண், நீலாவதி சம்பத்குமார், ஜெயந்திஅருண்முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர்கள் விஜயராஜன், மலர்விழி, துணைமுதல்வர்கள் நவநீதகிருஷ்ணன், அஜித்தா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்திலேயே அனைத்து விளையாட்டு வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய விளையாட்டு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story