கலாச்சாரம், சமூக உறவை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய மந்திரி அனுராக் தாகூர்


கலாச்சாரம், சமூக உறவை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய மந்திரி அனுராக் தாகூர்
x
தினத்தந்தி 19 March 2023 7:27 AM GMT (Updated: 2023-03-19T19:31:55+05:30)

கலாச்சாரம், சமூக உறவை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என்று மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.

சென்னை,

சென்னை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அனுராக் தாகூர், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறியதாவது:-

"கலாச்சாரம், சமூக உறவை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவை விளையாட்டின் மூலம் கிடைக்கின்றன. ரவிச்சந்திரன் அஸ்வின், ஷரத்குமார், ஜோஸ்வா சின்னப்பா தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு கிடைத்த பெருமை" என்று கூறினார்.


Next Story