தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருகிறது என முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

ஆசிய விளையாட்டில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை ஆர். ஏ.புரத்தில் நடைபெற்றது. இதில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 20 பேருக்கு, ரூ . 9.4 கோடி ரொக்க பரிசு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,

சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது . தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை 'ஸ்டார்' துறையாக வளர்ந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பார்த்து இன்னும் ஏராளமான வீரர்கள் உருவாகுவார்கள் என்று நம்புகிறேன். என கூறினார்.


Next Story