நாய்கள் கடித்து புள்ளிமான் பலி


நாய்கள் கடித்து புள்ளிமான் பலி
x

நாய்கள் கடித்து புள்ளிமான் பலியானது.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே கட்டக்காளைபட்டி பகுதியில் உள்ள வெள்ளிமலையில் ஏராளமான புள்ளி மான்கள் வாழ்கின்றன. அங்கிருந்து மான்கள் இரை தேடி அப்பகுதி கிராம விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு 2 வயது பெண் புள்ளி மான் ஒன்று இரைதேடி வந்துள்ளது. அப்போது நாய்கள் விரட்டி கடித்ததில் படுகாயமடைந்த அந்த புள்ளிமான் இறந்தது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களில் இதுபோல 10-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் இறந்துள்ளன. மலைப்பகுதியில் குடிதண்ணீர் தொட்டிகள் அமைத்து புள்ளிமான்களை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story