வாகனம் மோதி புள்ளிமான் பலி


வாகனம் மோதி புள்ளிமான் பலி
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி புள்ளிமான் பலியானது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை பகுதியில் உள்ள கண்மாய்களில் அதிக அளவில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும்போது வாகனங்களில் அடிப்பட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருவாடானை அருகே மங்களநாதன்குளம் பகுதியில் நேற்று அதிகாலை தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து அறிந்த திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியாராமு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அலுவலர்கள் உயிரிழந்த புள்ளிமான் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர்.

1 More update

Next Story