செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு தினமும் உலா வரும் புள்ளிமான் பார்த்து ரசித்து பொதுமக்கள் மகிழ்ச்சி


செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு தினமும் உலா வரும் புள்ளிமான்  பார்த்து ரசித்து பொதுமக்கள் மகிழ்ச்சி
x

செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு தினமும் உலா வரும் புள்ளிமானை பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருவண்ணாமலை செல்லும் சாலையோரம் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிக்குட்பட்ட காப்புக்காட்டில் மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வாறு வசிக்கும் புள்ளிமான் ஒன்று கடந்த சில நாட்களாக தினமும் காலையில் கோட்டை அருகே உள்ள செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு வருகிறது. பின்னர் அந்த புள்ளி மான் அந்த வளாகத்தில் வேளாண்மை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் துள்ளிக்குதித்து அங்கும் இங்குமாக ஓடி வருகிறது. அப்போது அங்குள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அருகில் சென்றாலும் அச்சமின்றி புள்ளிமான் சுற்றித்திரிவதோடு, மாலை 5 மணிக்குமேல் வனப்பகுதிக்கு சென்றுவிடுகிறது. தினமும் புள்ளிமான் வரும் சம்பவம் காட்டுத்தீ போல் செஞ்சி பகுதி மக்களிடையே பரவியதால், பெரியவர்கள், குழந்தைகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு வந்து புள்ளிமானை கண்டு ரசித்து செல்கிறார்கள். புள்ளிமானை பார்க்க தினமும் ஏராளமானோர் குவிந்து வருவதால் ஒன்றிய அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

1 More update

Next Story