கொசு தாக்குதலை தடுக்க மருந்து தெளிக்கும் பணி மும்முரம்


கொசு தாக்குதலை தடுக்க மருந்து தெளிக்கும் பணி மும்முரம்
x

தேயிலை செடிகளில் கொசு தாக்குதலை தடுக்க மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

தேயிலை செடிகளில் கொசு தாக்குதலை தடுக்க மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேயிலை கொசு தாக்குதல்

தேயிலை செடிகளை அந்தந்த காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு நோய்கள், பூச்சிகள் தாக்கி வருகிறது. தற்போது வால்பாறை பகுதியில் வெயிலும், விட்டுவிட்டு மழையும் பெய்து கொண்டிருப்பதால், செடிகளை தேயிலை கொசு தாக்கி வருகிறது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழையும், அதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் தொடங்கி விடும். இதன் காரணமாக தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து விடும். மேலும் எஸ்டேட் நிர்வாகங்களுக்கு தொழிலில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து இந்த மாதம் வரை விட்டு விட்டு மழையும், பகலில் கடுமையான வெயிலும் கொண்ட காலநிலை நிலவி வருகிறது. இதனால் அனைத்து எஸ்டேட் பகுதியிலும் தேயிலை மகசூல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

மகசூல் பாதிப்பு

இந்த நிலையில் தற்போது செடிகளை தேயிலை கொசு தாக்கி வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வரும் இந்த சமயத்தில், கொசு தாக்கி வருவதால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து தேயிலை தோட்ட நிர்வாகங்களும், தற்போது தேயிலை கொசுவை கட்டுப்படுத்த செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இறுதி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை தேயிலை மகசூல் பாதிக்கப்படும் இந்த சமயத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்டால் நிர்வாகங்களுக்கு பெரியளவிலான பாதிப்பு ஏற்படாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து காணப்படும் சமயத்தில் கொசு தாக்க தொடங்கியிருப்பதால் எஸ்டேட் நிர்வாகங்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மகசூலும் பாதிக்கப்பட்டு வருகிறது.


Next Story