எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்தநாள் விழா


எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்தநாள் விழா
x

நூலக தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்தநாள் விழா நடந்தது.

மயிலாடுதுறை


சீர்காழி

சீர்காழியில் பிறந்த நூலக தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதனின் 130-வது பிறந்தநாள் விழா சீர்காழி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் செம்மலர் வீரசேனன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமநாதன் வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத்தலைவர் சுப்பராயன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் காமராசு, புலவர் சண்முகம், கவிஞர் சவுரிராஜன் உள்பட பலர் பேசினர். இதில் நூலக ஆசிரியர் இளங்கோ, கிளைநூலகர் விஜய், வாசகர் வட்ட நிர்வாகிகள் பிரபாகரன், கோவி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story