ஸ்ரீ அரபிந்தோ நர்சிங் கல்லூரி ஆண்டு விழா


ஸ்ரீ அரபிந்தோ நர்சிங் கல்லூரி ஆண்டு விழா
x

ஸ்ரீ அரபிந்தோ நர்சிங் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

கரூர்

புன்னம் சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீ அரபிந்தோ நர்சிங் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அன்னை அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் தங்கராஜூ, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ஏஞ்சலினா பாஸ்கர் வரவேற்று ேபசி, ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி பேராசிரியை தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்த்தி கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை இயக்குனர்கள், துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ஈஸ்வரி நன்றி கூறினார்.


Next Story