தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!


தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!
x
தினத்தந்தி 21 Dec 2022 3:11 PM IST (Updated: 21 Dec 2022 3:11 PM IST)
t-max-icont-min-icon

நாகை மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை,

நாகையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல்பகுதியில் நுழைந்ததாக்கூறி 11 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.

இந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்கள் 11 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.



Next Story