ஸ்ரீராமகிருஷ்ணா, ஸ்ரீசாரதா தேவி பள்ளி மாணவர்கள் சாதனை


ஸ்ரீராமகிருஷ்ணா, ஸ்ரீசாரதா தேவி பள்ளி மாணவர்கள் சாதனை
x

ஸ்ரீராமகிருஷ்ணா, ஸ்ரீசாரதா தேவி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்ரீராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மாணவர் விக்னேஸ்வரன் 500-க்கு 493 மதிப்பெண்ணும், மாணவர் அஜய் 489 மதிப்பெண்ணும், மாணவர் சைலாஸ் 484 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இப்பள்ளியின் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 9 பேரும், கணிதபாடத்தில் 7 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சிறப்பிடம்பெற்றுள்ளனர். ஸ்ரீசாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நடந்துமுடிந்துள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம்தேர்ச்சி பெற்றுள்ளனர். 11 பேர் 480 மதிப்பெண்ணுக்கு மேலும், 57 பேர் 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 126பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாணவி விஜி 500-க்கு 489 மதிப்பெண்ணும், மாணவி காவியா 488 மதிப்பெண்ணும், மாணவி விஷ்ணுபிரியா 486 மதிப்பெண் பெற்றும் முதல் 3 இடங்களை பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் சிவசுப்ரமணியன் மற்றும் செயலாளர் விவேகானந்தன், பள்ளி முதல்வர் ஆகியோர் இனிப்புகள் வழங்கி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.


Next Story